இரவில் எதிரில் வரும் வாகனத்தின் கண் கூசும் வெளிச்சத்தை(குறும்போ/ மறதியோ) மட்டுப்படுத்த நாமும் அதையே செய்ய வேண்டி உள்ளது # வேற பாஷை இல்லை!!
Wednesday, December 12, 2012
நல்ல காலம் பொறக்குது
தின ராசி பலனை இரவில் படுக்கப் போகும் போது பார்க்க ஆரம்பித்தால், சில நாட்களிலேயே அந்த பழக்கத்தை விட்டு விடுவோம்# அனுபவம்!
Tuesday, November 20, 2012
துப்பாக்கி:
துப்பாக்கி: ராணுவத்துக்கு ஒரு சல்யூட் ! அரசுக்கே ஐடியா கொடுக்கிறார், முருகதாஸ்! பாடல்களில் இன்னும் மெனக்கெட்டு இருக்க வேண்டும்!
Monday, November 5, 2012
இந்திரா Vsசோனியா
வங்கியை பொதுக் காப்பீட்டுத் துறையை தேசிய மயமாக்கினார் இந்திரா அன்று # சில்லறை வணிகத்தை காப்பீட்டுத் துறையை சர்வ தேச மயமாக்கத் துடிக்கிறார் அவரது சிலைக்கு (31.10.12) மாலையிட்ட மருமகள் சோனியா இன்று!
Thursday, October 18, 2012
காந்தி ஜெயந்தி கவிதை!
அமெரிக்க திருப்தியே,
காந்தி தேசத்தை ஆள்வோரின்
திருப்பதி ஆகி விட்டது!
'டைம்' இதழ் பாம் வைத்தால்
கதர்ச் சட்டை பதறுகிறது!
'வாஷிங்டன் போஸ்ட்' வாரினாலோ,
வால்மார்ட்டுக்கு வாரி வழங்குகிறார்
சலுகைகளை!
(காந்தி) சிலைத் தொகையை
மிஞ்சி விட்டது,
நாளுக்கொன்றாய்
அம்பலத்துக்கு வரும்
ஊழல் தொகை!
காந்தி மண்ணிலேயே
கோட்சே கட்சிக்காரரின் ஆட்சி!!
சுதந்திரம் கிடைத்ததும
காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் என்றார்
அவ்வாறு செய்யாததால்
இன்று மக்களின் வாழ்வைக்
கலைத்து கொண்டிருக்கிறார்கள்!!
Monday, September 17, 2012
சில்லறை அரசு!!
வால் மார்ட்டுக்கு வால் பிடிக்கும் மத்திய அரசு # 5 கோடி சாமான்ய வணிகரின் கழுத்தில் கத்தியை வைக்கும் சில்லறை அரசு!!
அமெரிக்க திருப்தியே, காந்தி தேசத்தை ஆள்வோரின் திருப்பதி ஆகி விட்டது!'டைம்' இதழ் பாம் வைத்தால் கதர்ச் சட்டை பதறுகிறது! 'வாஷிங்டன் போஸ்ட்' வாரினாலோ, வால்மார்ட்டுக்கு வாரி வழங்குகிறார் சலுகைகளை! (காந்தி) சிலைத் தொகையை மிஞ்சி விட்டது, நாளுக்கொன்றாய் அம்பலத்துக்கு வரும் ஊழல் தொகை! காந்தி மண்ணிலேயே கோட்சே கட்சிக்காரரின் ஆட்சி!! சுதந்திரம் கிடைத்ததும காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் என்றார்; அவ்வாறு செய்யாததால் இன்று மக்களின் வாழ்வைக் கலைத்து கொண்டிருக்கிறார்கள்!
பதிவுசெய்தவர் வீரதமிழ்மகன் 10/17/2012 22:16
51% = 100%
51% : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!
100% தோல்வி : வரும் தேர்தலில் காங். கட்சிக்கு மக்கள் கொடுக்கப் போகும் வெகுமதி!!
100% தோல்வி : வரும் தேர்தலில் காங். கட்சிக்கு மக்கள் கொடுக்கப் போகும் வெகுமதி!!
துரத்தலும் விரட்டலும்!!
தூய்மைக் குறைவு துரத்துகிறது : அரசு மருத்துவமனைகளில் ;
வாய்மைக் குறைவு விரட்டுகிறது : தனியார் ஆஸ்பத்திரிகளில்!!
வாய்மைக் குறைவு விரட்டுகிறது : தனியார் ஆஸ்பத்திரிகளில்!!
Tuesday, September 11, 2012
மன்மோகன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்,கோழை-வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை#எந்தபிரிவில் வழக்குப் போடலாம் என்று ஜெயாவிடம் கேளுங்கள் மன்மோகன்ஜி!
" மன்மோகன் முடிவெடுக்க தயங்குபவர்,ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர், மௌனி, கோழை " -வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை #எந்த பிரிவில் வழக்குப் போடலாம் என்று ஜெயாவிடம் கேளுங்கள் மன்மோகன் ஜி!
Sunday, August 19, 2012
My letter in "The Hindu" (31.07.2012, Tuesday)
TWO INTERVENTIONS
The article “A tale of two interventions” (July 28) was very interesting. I was surprised to learn that Rajiv Gandhi signed the Indo-Sri Lankan Accord against the advice of P.V. Narasimha Rao. I remember Voice of America describing the Indian intervention in Sri Lanka as a “political gamble.” Lack of Plan B (after the Indian troops were ordered out of Sri Lanka) points to Rajiv Gandhi’s ineffective leadership. The war to liberate Bangladesh in 1971 was indeed a picture in contrast. Kissinger termed the Indo-Soviet Friendship treaty signed in August 1971 a ‘bombshell’ which effectively prevented American and Chinese interference.
Veerathamilmakan,
Krishnapuram,
Saturday, August 4, 2012
'திட்டம்' என்றாலே "கமிஷன்"
'திட்டம்' என்றாலே "கமிஷன்"என்று இந்த அரசியல்வாதிகள் அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள் # திட்டக் கமிஷன் பெயரை மாத்துங்கப்பா
Sunday, July 15, 2012
2 கக்கூஸ்= 35 இலட்சம்
டில்லியில் உள்ள திட்டக்கமிஷன் அலுவலகத்தில் உள்ள இரண்டு கக்கூசை புதுப்பிக்க 35 இலட்சம்செலவு # இதப்பார்றா...
Sunday, July 8, 2012
காந்தி
காந்தி உழைத்தார் நாட்டுக்காக ...
நாம் எல்லோரும் உழைக்கிறோம் காந்தி நோட் டுக்காக....!!
(சில ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தந்தி குடும்ப மலர் புதுக் கவிதை)
நாம் எல்லோரும் உழைக்கிறோம் காந்தி நோட் டுக்காக....!!
(சில ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தந்தி குடும்ப மலர் புதுக் கவிதை)
Saturday, July 7, 2012
தானம்...தேவை நிதானம்
ஐரோப்பாவுக்கு 50000 கோடி அழப் போறாராம்,மன்மோகன் # மொதல்ல பஸ் நிலையங்களில் நல்ல கழிவறைகளை அமைச்சிக் கொடுங்க , தானத்தை எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்11
Wednesday, July 4, 2012
ஞானம் !
"அரசியலில் இளைஞர்களுக்கு முதியவர்கள் வழி விட வேண்டும்" -பிரணாப் முகரஜி # ஜனாதிபதி தேர்தலில் மனு தாக்கல் செய்த மறு கணம் தோன்றிய ஞானம் !(அட்ரா ...சக்கை))
Sunday, July 1, 2012
மருத்துவர்கள் தினம்!
வங்கிக் கடனை, தப்பித் தவறி கிளினிக் உள்ளே நுழைந்து விடும் ஏமாளிகளிடம் இருந்து வலுக் கட்டாய வசூல் செய்பவர்களின் தினம்?!
Tuesday, June 26, 2012
இது தாண்டா ஜனநாயகம்!
எம்பிக்களுக்கு ஆண்டுக்கு 1 1/2 லட்சம் அழைப்புக்கள் இலவசம். கூடுதல் அழைப்புக்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டலும் கேள்வி கேட்க முடியாது.(இது தாண்டா ஜனநாயகம்!)
Sunday, June 24, 2012
மனித நேயம்!
இன்று தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தேன். பஸ் பாவூர் சத்திரம் தாண்டி கொஞ்ச தூரம் வந்து இருக்கும்.
ஒரு பாட்டி திடீர் என்று " பணம் இல்லையே ...என்ன பண்ணுவேன்..." என்று பதறினார்
டிரைவர் பஸ்சை நிறுத்தினார். " இறங்கிப் போய் அடுத்த பஸ்ஸில் வா" என்றார் கண்டகடர்.
அருகில் இருந்த பர்தா அணிந்திருந்த அழகிய இளம்பெண் அவருக்காக ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். கண்டக்டர் அதனை வாங்குவதற்குள் பாட்டி "இதோ பணம் இருக்கு...சுருக்குப் பையில் வச்சதை மறந்துட்டேன்"
எல்லோரும் சிரித்தார்கள்!!
ஒரு பாட்டி திடீர் என்று " பணம் இல்லையே ...என்ன பண்ணுவேன்..." என்று பதறினார்
டிரைவர் பஸ்சை நிறுத்தினார். " இறங்கிப் போய் அடுத்த பஸ்ஸில் வா" என்றார் கண்டகடர்.
அருகில் இருந்த பர்தா அணிந்திருந்த அழகிய இளம்பெண் அவருக்காக ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். கண்டக்டர் அதனை வாங்குவதற்குள் பாட்டி "இதோ பணம் இருக்கு...சுருக்குப் பையில் வச்சதை மறந்துட்டேன்"
எல்லோரும் சிரித்தார்கள்!!
முரண் !
ஓசிப் பயணம் செய்த இளைஞர் பரிசோதகரால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டார் : செய்தி ('176' ரூ. ஏமாற்றினால் பரலோக டிக்கெட் ; '1.76' லட்சம் கோடி என்றால் ஜாமீன் டிக்கெ ட்!)
Thursday, June 21, 2012
சாலை விபத்துக்களுக்கு காரணம் :
கடுப்படிக்கும் மனைவிகள்
குதறும் அப்பாக்கள்,
அட்வைஸ் டார்சசர்
கொடுக்கும் அண்ணன்களும் ,
தான்.ஆழமான ஆராய்ச்சி அவசியம்!
Saturday, June 9, 2012
உயிர் போகும் வரை!
நட்பு முறிந்து,
ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் கூட,
நண்பனிடம் இருந்து
கற்றுக்கொண்ட நற்பழக்கங்கள்
போய் விடுவதில்லை !
ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் கூட,
நண்பனிடம் இருந்து
கற்றுக்கொண்ட நற்பழக்கங்கள்
போய் விடுவதில்லை !
Sunday, June 3, 2012
Bumper Lottery Prize! Pray, Government Ban this!
Some Hospitals,
Win Mega Bumper Prizes,
In the form of
Seriously injured patients( road accidents),
Who are sure to die, in a few days,
But ensure a few lacs for those hospitals!
Pray, Government Ban this!
Win Mega Bumper Prizes,
In the form of
Seriously injured patients( road accidents),
Who are sure to die, in a few days,
But ensure a few lacs for those hospitals!
Pray, Government Ban this!
Sunday, May 27, 2012
பெட்ரோல் விலை உயர்வு ரத்து!
கறுப்பர் இனத்தலைவர்
மார்டின் லூதர் கிங்
(அவரது வழி காட்டி காந்தி)
காட்டிய வழி யில் நாட்டின்
அனைத்து
மோட்டார் டூ வீலர்களையும்
சில நாட்கள்
வீட்டிலேயே வைப்போம்,
வெளியே எடுக்க வேண்டாம்!
வேலைக்கு,
கல்லூரிக்கு
நடந்தோ, சைக்கிளிலோ , பஸ்சிலோ
கஷ்டத்தைப் பார்க்காமல்
பயணிப்போம்.
ஒரு வாரத்திற்குள்
அரசு மக்களிடம்
மண்டியிடும்!
Subscribe to:
Posts (Atom)