Thursday, October 18, 2012

காந்தி ஜெயந்தி கவிதை!




அமெரிக்க திருப்தியே,
காந்தி தேசத்தை ஆள்வோரின்
 திருப்பதி ஆகி விட்டது!
'டைம்' இதழ் பாம் வைத்தால்
 கதர்ச் சட்டை பதறுகிறது!
 'வாஷிங்டன் போஸ்ட்' வாரினாலோ,
 வால்மார்ட்டுக்கு வாரி வழங்குகிறார்
 சலுகைகளை!
 (காந்தி) சிலைத் தொகையை
மிஞ்சி விட்டது,
நாளுக்கொன்றாய்
அம்பலத்துக்கு வரும்
ஊழல் தொகை!
காந்தி மண்ணிலேயே
 கோட்சே கட்சிக்காரரின் ஆட்சி!!
சுதந்திரம் கிடைத்ததும
 காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் என்றார்
அவ்வாறு செய்யாததால்
 இன்று மக்களின் வாழ்வைக்
 கலைத்து கொண்டிருக்கிறார்கள்!!