Friday, December 27, 2013

'27' ஆண்டுகள் சிறை வாசம்!பின்அரியாசனம் உன் வசம்!!...நெல்சன் மண்டேலா ...



ஆப்பிரிக்காவின் கலங்கரை விளக்கே !

மண்டேலா, நீ
மண்டியிடாதது என்றும் ,
தென் ஆப்பிரிக்காவின் இன வெறி லா(law )!

'அகிம்சை' வழிகள்
அதிபர் 'போத்தா' வுக்கு,
போதாததால்,
ஆயுதத்துக்கு மாறினாய்!

'27' ஆண்டுகள்,
இருள் சிறை வாசம்!
பின்போ,
ஆட்சிக் கட்டில் உன் வசம்!!

உன்னை மட்டும்
சிறைக்கு வெளியே அனுப்ப
எத்தனித்தது,
சிறு பான்மை  வெள்ளை அரசு!
"தோழர்களையும் என்னுடன்  அனுப்பு"
என்று நிராகரித்தாய்!

மனதில் புயலே அடித்தாலும்,
முகத்தில் புன்னகையை மட்டும் அணிந்தாய் !

உன் நேர்மைக்கு
"கியுபா " காஸ்ட்ரோ
சான்றிதழ்  தருகிறார்!

உந்தன் லட்சிய பயணத்துக்கு
இந்தியாவும் வீசியது சாமரம்!

ஆம்!
காந்தியக்கொள்கைக்கு
முதல் பரிசோதனைக் களமான
உன்  தாயகம் மீது,
தடைகளை விதித்தது,
காந்தியின் இந்தியா தான்!

ஆப்பிரிக்க நாடுகள்
போக வேண்டிய தூரம்,
தூரம் என்றாலும்,
உலகோருக்கு என்றும் நீ ஆதர்ஷ புருஷன் தான்!!



Saturday, December 14, 2013

பேசியும்...பேசாமலும்...

கொங்கு மண்டலத் துக்காரன்  பேசக் காசு கேட்கிறான்... தெற்கத்தியானோ பேசாமல் இருக்க காசு கேட்கிறான்!!