Friday, April 24, 2015

ஆங்கிலேயர் பெயரை மகனுக்கு வைத்த வஉ சிதம்பரனார்

Image result for v o chidambaram pillai with his son
ரத்து  செய்யப்பட்ட தனது வக்கீல் உரிமத்தை புதுப்பிக்க உதவிய ஆங்கிலேய அதிகாரியான "வால்ஸ்" பெயரை தனது கடைசி  மகனுக்கு (வாலேஸ்வரன்) வைத்து தனது நன்றியை காட்டினார், வ.உ . சி.!
(நன்றி: மெய்வருத்த கூலி தரும், புத்தகம் by  ஸ்டாலின் குணசேகரன்)

அப்துல் கலாம் அடகு வைத்த அறிவியல் புத்தகம்!



Image result for abdul kalam with  a book in his hand

 சென்னை MIT இல் அவர்  படிக்கும் பொது ஊருக்குப் போக காசு இல்லாததால் மூர் மார்கெட்டில் முதலாம் ஆண்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றார். அந்த வியாபாரி இவர் மீது இரக்கம்  கொண்டு 60 ரூபாய் கொடுத்து அனுப்பினார். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அந்த புத்தகம்: "Theory of Elasticity".  அந்த புத்தகம் தான் அவரைப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. ஈரோடு புத்தக கண்காட்சியில் கலாம் கூறியது. (நன்றி: "மெய் வருத்தக் கூலி தரும்",புத்தகம்  by ஸ்டாலின் குணசேகரன்)