Tuesday, June 26, 2012

இது தாண்டா ஜனநாயகம்!

எம்பிக்களுக்கு ஆண்டுக்கு 1 1/2 லட்சம் அழைப்புக்கள் இலவசம். கூடுதல் அழைப்புக்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டலும் கேள்வி கேட்க முடியாது.(இது தாண்டா ஜனநாயகம்!)

Sunday, June 24, 2012

மனித நேயம்!

இன்று தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தேன். பஸ்  பாவூர் சத்திரம் தாண்டி கொஞ்ச தூரம் வந்து இருக்கும். 


ஒரு பாட்டி திடீர் என்று " பணம் இல்லையே ...என்ன பண்ணுவேன்..." என்று பதறினார் 


டிரைவர் பஸ்சை நிறுத்தினார். " இறங்கிப் போய் அடுத்த பஸ்ஸில் வா" என்றார் கண்டகடர்.


அருகில் இருந்த பர்தா  அணிந்திருந்த அழகிய இளம்பெண் அவருக்காக ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். கண்டக்டர்  அதனை வாங்குவதற்குள் பாட்டி "இதோ பணம் இருக்கு...சுருக்குப் பையில் வச்சதை மறந்துட்டேன்"

எல்லோரும் சிரித்தார்கள்!!



முரண் !

  ஓசிப் பயணம் செய்த இளைஞர் பரிசோதகரால் ரயிலில் இருந்து  தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டார் : செய்தி ('176' ரூ. ஏமாற்றினால் பரலோக டிக்கெட் ; '1.76' லட்சம் கோடி என்றால் ஜாமீன் டிக்கெ ட்!)

Thursday, June 21, 2012

சாலை விபத்துக்களுக்கு காரணம் :


கடுப்படிக்கும் மனைவிகள்
குதறும் அப்பாக்கள்,
அட்வைஸ்  டார்சசர்
கொடுக்கும் அண்ணன்களும் ,
 தான்.ஆழமான ஆராய்ச்சி அவசியம்!

Saturday, June 9, 2012

உயிர் போகும் வரை!

நட்பு முறிந்து, 
ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் கூட, 
நண்பனிடம் இருந்து
 கற்றுக்கொண்ட நற்பழக்கங்கள் 
போய் விடுவதில்லை !


Sunday, June 3, 2012

Bumper Lottery Prize! Pray, Government Ban this!

Some Hospitals,
Win Mega  Bumper Prizes,
In the form of
Seriously injured patients( road accidents),
Who are sure to die, in a few days,
But ensure a few lacs for those hospitals!
Pray, Government Ban this!