Monday, September 17, 2012

சில்லறை அரசு!!

வால் மார்ட்டுக்கு வால் பிடிக்கும் மத்திய அரசு # 5 கோடி சாமான்ய வணிகரின் கழுத்தில் கத்தியை வைக்கும் சில்லறை அரசு!!


அமெரிக்க திருப்தியே, காந்தி தேசத்தை ஆள்வோரின் திருப்பதி ஆகி விட்டது!'டைம்' இதழ் பாம் வைத்தால் கதர்ச் சட்டை பதறுகிறது! 'வாஷிங்டன் போஸ்ட்' வாரினாலோ, வால்மார்ட்டுக்கு வாரி வழங்குகிறார் சலுகைகளை! (காந்தி) சிலைத் தொகையை மிஞ்சி விட்டது, நாளுக்கொன்றாய் அம்பலத்துக்கு வரும் ஊழல் தொகை! காந்தி மண்ணிலேயே கோட்சே கட்சிக்காரரின் ஆட்சி!! சுதந்திரம் கிடைத்ததும காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் என்றார்; அவ்வாறு செய்யாததால் இன்று மக்களின் வாழ்வைக் கலைத்து கொண்டிருக்கிறார்கள்!

51% = 100%

51% : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!
100% தோல்வி : வரும் தேர்தலில் காங். கட்சிக்கு  மக்கள் கொடுக்கப் போகும் வெகுமதி!!

துரத்தலும் விரட்டலும்!!

தூய்மைக் குறைவு துரத்துகிறது : அரசு  மருத்துவமனைகளில் ;
 வாய்மைக் குறைவு விரட்டுகிறது : தனியார் ஆஸ்பத்திரிகளில்!!









Tuesday, September 11, 2012

மன்மோகன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்,கோழை-வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை#எந்தபிரிவில் வழக்குப் போடலாம் என்று ஜெயாவிடம் கேளுங்கள் மன்மோகன்ஜி!

" மன்மோகன்   முடிவெடுக்க தயங்குபவர்,ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்,  மௌனி, கோழை " -வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை #எந்த  பிரிவில்   வழக்குப் போடலாம் என்று ஜெயாவிடம்  கேளுங்கள் மன்மோகன் ஜி!