Sunday, July 8, 2012
காந்தி
காந்தி உழைத்தார் நாட்டுக்காக ...
நாம் எல்லோரும் உழைக்கிறோம் காந்தி நோட் டுக்காக....!!
(சில ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தந்தி குடும்ப மலர் புதுக் கவிதை)
நாம் எல்லோரும் உழைக்கிறோம் காந்தி நோட் டுக்காக....!!
(சில ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தந்தி குடும்ப மலர் புதுக் கவிதை)
Saturday, July 7, 2012
தானம்...தேவை நிதானம்
ஐரோப்பாவுக்கு 50000 கோடி அழப் போறாராம்,மன்மோகன் # மொதல்ல பஸ் நிலையங்களில் நல்ல கழிவறைகளை அமைச்சிக் கொடுங்க , தானத்தை எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்11
Wednesday, July 4, 2012
ஞானம் !
"அரசியலில் இளைஞர்களுக்கு முதியவர்கள் வழி விட வேண்டும்" -பிரணாப் முகரஜி # ஜனாதிபதி தேர்தலில் மனு தாக்கல் செய்த மறு கணம் தோன்றிய ஞானம் !(அட்ரா ...சக்கை))
Sunday, July 1, 2012
மருத்துவர்கள் தினம்!
வங்கிக் கடனை, தப்பித் தவறி கிளினிக் உள்ளே நுழைந்து விடும் ஏமாளிகளிடம் இருந்து வலுக் கட்டாய வசூல் செய்பவர்களின் தினம்?!
Tuesday, June 26, 2012
இது தாண்டா ஜனநாயகம்!
எம்பிக்களுக்கு ஆண்டுக்கு 1 1/2 லட்சம் அழைப்புக்கள் இலவசம். கூடுதல் அழைப்புக்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டலும் கேள்வி கேட்க முடியாது.(இது தாண்டா ஜனநாயகம்!)
Sunday, June 24, 2012
மனித நேயம்!
இன்று தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தேன். பஸ் பாவூர் சத்திரம் தாண்டி கொஞ்ச தூரம் வந்து இருக்கும்.
ஒரு பாட்டி திடீர் என்று " பணம் இல்லையே ...என்ன பண்ணுவேன்..." என்று பதறினார்
டிரைவர் பஸ்சை நிறுத்தினார். " இறங்கிப் போய் அடுத்த பஸ்ஸில் வா" என்றார் கண்டகடர்.
அருகில் இருந்த பர்தா அணிந்திருந்த அழகிய இளம்பெண் அவருக்காக ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். கண்டக்டர் அதனை வாங்குவதற்குள் பாட்டி "இதோ பணம் இருக்கு...சுருக்குப் பையில் வச்சதை மறந்துட்டேன்"
எல்லோரும் சிரித்தார்கள்!!

Subscribe to:
Posts (Atom)