Friday, December 27, 2013

'27' ஆண்டுகள் சிறை வாசம்!பின்அரியாசனம் உன் வசம்!!...நெல்சன் மண்டேலா ...



ஆப்பிரிக்காவின் கலங்கரை விளக்கே !

மண்டேலா, நீ
மண்டியிடாதது என்றும் ,
தென் ஆப்பிரிக்காவின் இன வெறி லா(law )!

'அகிம்சை' வழிகள்
அதிபர் 'போத்தா' வுக்கு,
போதாததால்,
ஆயுதத்துக்கு மாறினாய்!

'27' ஆண்டுகள்,
இருள் சிறை வாசம்!
பின்போ,
ஆட்சிக் கட்டில் உன் வசம்!!

உன்னை மட்டும்
சிறைக்கு வெளியே அனுப்ப
எத்தனித்தது,
சிறு பான்மை  வெள்ளை அரசு!
"தோழர்களையும் என்னுடன்  அனுப்பு"
என்று நிராகரித்தாய்!

மனதில் புயலே அடித்தாலும்,
முகத்தில் புன்னகையை மட்டும் அணிந்தாய் !

உன் நேர்மைக்கு
"கியுபா " காஸ்ட்ரோ
சான்றிதழ்  தருகிறார்!

உந்தன் லட்சிய பயணத்துக்கு
இந்தியாவும் வீசியது சாமரம்!

ஆம்!
காந்தியக்கொள்கைக்கு
முதல் பரிசோதனைக் களமான
உன்  தாயகம் மீது,
தடைகளை விதித்தது,
காந்தியின் இந்தியா தான்!

ஆப்பிரிக்க நாடுகள்
போக வேண்டிய தூரம்,
தூரம் என்றாலும்,
உலகோருக்கு என்றும் நீ ஆதர்ஷ புருஷன் தான்!!



Saturday, December 14, 2013

பேசியும்...பேசாமலும்...

கொங்கு மண்டலத் துக்காரன்  பேசக் காசு கேட்கிறான்... தெற்கத்தியானோ பேசாமல் இருக்க காசு கேட்கிறான்!!




Wednesday, October 2, 2013

கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரணும் ..

அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.CCE என்று அம்மா அறிமுகப் படுத்திய திட்டம் அவர்கள் நிம்மதியை நிர்மூலமாக்கி விட்டது.1-5 வகுப்புகளில் சரியாகப் படிக்காமல் 6 ஆம் வகுப்பு வரும் மாணவர்களுக்கு ABC ..கூட தெரியவில்லை.முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.1-5 ஆசிரியர்கள் சங்கம் பலமாக இருப்பதால் அவர்களிடம் பேசவே முடியாது. இளிச்ச வாயர்கள் இந்த பட்டதாரிகள் தான். இவர்கள் சங்கமும் பலவீனமான சங்கமாக உள்ளது.பலர் வேலையை விட்டு விடும் முடிவில் உள்ளார்கள். சிலர் வெளி நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த அளவு மேல் அதிகாரிகள் அவர்களை சித்ரவதை செய்கிறார்கள். கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று அவர்கள் கடவுளை வேண்டுதல் செய்கிறார்கள்!!

Saturday, September 14, 2013

சிரியா ....இப்போது "சிரிய்யா" .!!

சிரியா ....இப்போது "சிரிய்யா" . போர் இப்போதைக்கு இல்லை...ரஷ்யாவால் ஒபாமா பின் வாங்கி விட்டார்!! இருந்தாலும்,கொஞ்ச நாள் கழித்து வேதாளம் முருங்கைமரத்தில் ஏறினாலும் ஏறும்!!