Sunday, May 27, 2012

பெட்ரோல் விலை உயர்வு ரத்து!

கறுப்பர் இனத்தலைவர் 
மார்டின் லூதர் கிங் 
(அவரது வழி  காட்டி காந்தி)
காட்டிய வழி யில் நாட்டின் 
அனைத்து 
மோட்டார் டூ வீலர்களையும் 
சில நாட்கள் 
வீட்டிலேயே வைப்போம்,
வெளியே எடுக்க வேண்டாம்!
வேலைக்கு,
கல்லூரிக்கு 
நடந்தோ, சைக்கிளிலோ , பஸ்சிலோ 
கஷ்டத்தைப் பார்க்காமல் 
பயணிப்போம். 
ஒரு வாரத்திற்குள் 
அரசு மக்களிடம் 
மண்டியிடும்!

Saturday, May 26, 2012

மக்களைப் பொருட்படுத்தாத அரசின் தற்கொலை !

பெட்ரோலை ஊ(ஏ )ற்றி,
அரசு,
எதிர் வரும்
தேர்தல் வெற்றியை,
எரித்து விட்டது!


Wednesday, May 16, 2012

கடவுள் ?

கும்பகோணம் தீ விபத்தில் ,
குழந்தைகள்
மாண்ட செய்தியைக கேட்ட போதும்,
அரவாநிகளைப் பார்க்கும் போதும்,
பேருந்து நிலையங்களில் 
பிச்சை எடுக்கும் 
(மிகக்) குள்ள மனிதர்களின் 
குரலைக்  கேட்கும் போதும்,
"கடவுள்",  தன அருகில்
கேள்விக் குறி ஒன்றையும்
 படைத்துக் கொள்கிறார்!