Saturday, March 17, 2012

பங்களா தேஷ் போர்: நிக்சனை மிரள வைத்த இந்திரா




பங்களா தேஷ் போர்: இந்திராவும் நிக்சனும் 

நம் அண்டை நாடான பங்களாதேஷ் உருவாகிநாற்பதாண்டுகள் ட்டன. அதன் சுதந்திரத்தில் அன்றைய இந்திராவின்பங்குமகத்தானது. அதற்காக அவருக்கு அந்த நாட்டின் உயரிய ருதான "பங்கள
ாதேஷ் விடுதலை கௌரவம்"இறப்பிற்கு பிந்திய விருதாக வழ்ங்கப்பட்டது . அக்கால கட்டத்தில் (1971 இல்) அமெரிக்க அதிபராக இருந்தவர் நிக்ஸன். இவர் பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர். மேலும் சீனாவுடனான உறவுகளை சீர்படுத்த அதீத அக்கறை கொண்டிருந்தார். அதிபர் பதவி ஏற்கும் முன்பே இது குறித்து 'டைம்'; இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். " நான் சீனாவிற்கு செல்ல பெரிதும் ஆவலாக இருக்கிறேன் . ஒரு வேளை என்னால் முடியாமல் போய்விட்டால் என் பிள்ளைகள் அங்கு செல்வார்கள்". மாபெரும் நாடான சீனா வரும் 20 ஆண்டுகளில் உலகத்தலைமைப் பொறுப்பு ஏற்காவிட்டால் சர்வதேச சமுதாயம் தார்மீக அபாயததிற்கு உள்ளாகும். சீனாவுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்த பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் பெரிதும் துணை புரிந்தார். மேலும் தனிப்பட்ட முறையிலும் நிக்சனுக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் இடையே உணர்வு பூர்வமான நட்பு இருந்தது. அச்சமயம் நடந்து முடிந்த மாகாண சட்டமன்ற, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக கட்சி மாபெரும் வெற்றி ஈட்டியிருந்தது. இருப்பினும் அதன் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு ஆட்சிப் பொறுப்பை விட்டுக் கொடுக்க அதிபர் யாஹ்யா கான் தயாராக இல்லை. தேசிய சட்டசபையில் மொத்த இடங்கள் 300 இல் 162 ஐ அவாமி லீக கட்சி கைப்பற்றி இருந்தது. சட்டமன்ற தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று இருந்தது. பெரும் இந்திய நிலப்பகுதி பிரித்த மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே ஆழமான கசப்பும் அவ நம்பிக்கையும் நிலவி வந்தது. உருது மொழித் திணிப்பை எதிர்த்து பல வங்காளி மாணவர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து இருந்தார்கள். . முஜிபுர் ரஹ்மானுக்கு பதவி மறுக்கப்பட்டதை எதிர்த்து கொதித்து எழுந்தது கிழக்கு பாகிஸ்தான். அவருடன் பேச்சு வார்த்தை ஒரு புறம் நடத்திக்கொண்டே வரலாறு காணாத அடக்கு முறையை ஏவி விட்டார் யாஹ்யா கான் . யுதர்களுக்கு எதிரான ஹிட்லரின் அடக்கு முறையை ஒத்திருந்தது அது. கைது செயயப்பட்ட முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தானில், தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். அக்கட்சியின் தலைவர்களுள் சிலர் கல்கத்தாவிற்கு தப்பி சென்று ' நாடு கடந்த அரசு' ஒன்றை அமைத்தார்கள். கிழக்கு வங்காளிகள், யாவரும் வயது, மற்றும் ஆண் பெண் பேதம் எதுவும் இன்றி புரட்சி பதாகையை உயர்த்தி பிடித்தார்கள். அங்கு போராடி வந்த 'முக்தி வாகினி ' புரட்சியாளர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கியது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் அண்டை இந்திய மாநிலங்களுக்கு தப்பி வந்தனர். அவர்கள் எண்ணிக்கை வெகு சீக்கிரத்திலேயே ஒரு கோடியைத் தொட்டது. இந்திரா காந்தி அகதி முகாம்களைப் பார்வையிட்டார். அவர்களின் துயரம் பார்த்து கண் கலங்கினார் . "சர்வதேச சமுதாயம் இது பற்றி நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் செய்தாக வேண்டும்." என உதவியாளர்களிடம் கடுமையான குரலில் உறுதிபட கூறினார். "இது தொடர நாம் அனுமதிக்க முடியாது". "பாகிஸ்தான் தன் பொறுப்புக்களை இந்தியா மீது சுமத்த முடியாது. அந்த நாடு உலக நாடுகளுடன் இணைந்து ஓர் அரசியல் தீர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும். அகதிகள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் சொந்த நாடு திரும்ப அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்" இராணுவத்தலையீடு செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் ஒருமித்த கோரிக்கை எழுந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன் கூட அதனையே வலியுறுத்தினார். 1971 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்சிங்கர் அனுமானம் செய்து இருந்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் '9 'ஆம் தேதி கையெழுத்தான இந்தியா-சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தை அறிந்து 'இடி தாக்கிய நாகம்' போல அதிர்ந்து போனது அமெரிக்கா அமெரிக்காவும் சீனாவும் அதிகமாக இழைய ஆரம்பித்ததை சமாளிக்கும் பொருட்டே இந்தியா சோவித் நாட்டுடன் வரலாற்று சிறுப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 1971 ஜூலை வாக்கில் அமெரிக்காவிற்கான இந்தியா தூதர் 'ஜா' விடம் கிஸ்சிங்கர் தொலை பேசியில் பேசினார். சீனா இந்தியாவைத் தாககினால் எந்த உதவியையும் எதிர் பார்க்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால் பொருளாதார உதவிகளும் ஏனைய உதவிகளும் ரத்தாகி விடும் எனவும் எச்சரித்தார். கிழக்கு பாகிஸ்தான் பிரச்னையை நிக்சனும் கிஸ்சிங்கரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கண்முடித்தனமாக பாகிஸ்தானை ஆதரித்தார்கள். சீனாவுடனான புதிய நட்புக்கு மிக உதவிகரமாக இருந்ததால் அந்த நாட்டை விட்டு விலக முடியாத நிலையில் இருந்தது, அமெரிக்கா. மேலும் கிழக்கு பாகிஸ்தானை ஆதரித்தால் அதன் எதிரொலி தைவான் மற்றும் திபெத் பிரச்னைகளில் கேட்கக்கூடும்; இது சீனாவுக்கு அதிருப்தியைத் தரக்கூடும் என்றும் கவலைப் பட்டது. .



நிக்சனின் அழைப்பின் பேரில் 1971 ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இந்திரா அமெரிக்கா சென்றார். மிகவும் மோசமாகிக் கொண்டிருந்த கிழக்கு பாகிஸ்தான் பிரச்னை பற்றிப பேசவே இந்த அழைப்பு; இருப்பினும் கிழக்கு பாகிஸ்தானை விடுவிக்கும் முடிவுக்கு ஏற்கனவே இந்திரா வந்து இருந்தார். வெள்ளை மாளிகைப் புல்வெளியில் நடந்த சம்பிரதாய வரவேற்பில் ஒரிசா மாநில வெள்ளம் பற்றிப் பேசிய நிக்ஸன் கிழக்கு பாகிஸ்தான் பற்றி வாய் திறக்கவேயில்லை. கடுப்பான இந்திரா அடுத்து பேசிய போது நிக்சனை ஒரு பிடி பிடித்து விட்டார். வெளிறிப்போனது அமெரிக்கா அதிபரின் முகம். இரவில் நடந்த விருந்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. அவ்வளவு இறுக்கமான விருந்தை யாரும் கண்டிருக்க மாட்டார்கள்! மறுநாள் இந்திராவை 20 நிமிடங்கள் காக்க வைத்து பழி தீர்த்தார் நிக்ஸன். அந்த சந்திப்பில் 'இந்தியா-பாகிஸ்தான் ' எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறக் கோரினார் அமெரிக்கா அதிபர். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் இந்திரா. முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இந்திரா சுறாவளி சுற்றுப்பயணம் மேற் கொண்டார். கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் பிரச்னையின் தீவிரத்தை விளைக்கி இந்தியாவுக்கு ஆதரவு கோரிய அவரது அழுத்தந்திருத்தமான வேண்டுகோளுக்கு பெரும் சாதகமான வரவேற்பு கிடைத்தது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அன்று முன்னணி இந்திய விமானத்தளங்களை தாக்கியதன் மூலம் போரை ஆரம்பித்தார் யாஹ்யா கான். இந்திராவின் வேலை சுலபமாகப போய்விட்டது! கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழையுமாறு இநதியபபடைகளுக்கு உத்தரவிட்டார். மேற்கில் தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான். இந்தியபோர்க்கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை முற்றுகை இட்டன. இறுதியில் டாக்காவில் பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. இந்தியா சுதந்திர பங்களாதேஷை டிசம்பர் 6 ஆம் தேதி யன்று அங்கீகரித்தது. இந்தியாவை ஒரு வில்லனாகவே நிக்ஸன் கருதினார். பாகிஸ்தானுக்கு அதரவாக 1971 ஆம் ஆண்டு போரில் சீனா குதிக்கும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பு பொய்த்துப போனது. இந்தியா சோவியத் நட்புறவு ஒப்பந்தம் அந்த வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அமெரிக்காவின் கைகளையும் கட்டிப்போட்டது. அமெரிக்கா வங்காள விரிகுடாவிற்குள் "என்டர்ப்ரைஸ் " என்ற விமானந்தங்கிக்கப்பலை அனுப்பியது. சோவியத் ஏவுகணை கப்பல் பிரிவு ஒன்று அதனை இரகசியமாய் பின் தொடர்ந்தது .நிக்சனின் இந்த நடவடிக்கை குறைக்கின்ற நாய் கடிக்காது என்பதையே ஒத்து இருந்தது. ' "சோவியத் யூனியனின் பகடைக்காய் தான் இந்தியா" என்று உறுதியாக நம்பிய நிக்ஸன், பாகிஸ்தானை, அது அழித்து விடும என்று அஞ்சினார். தவறான பயம் அது. மேற்கு பாகிஸ்தானுக்குள்ளும் படைகளை அனுப்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது நம் நோக்கமல்ல என்றார் இந்திரா. "அங்கு மக்களும் இராணுவமும் நமக்கு எதிராக இருப்பார்கள்". 1973 இல் பங்களாதேஷை அங்கீகரித்த நிக்ஸன் வருடாந்திர அறிக்கையில் இந்தியாவை வெகுவாக புகழ்ந்திருந்தார். "1971 ஆம் ஆண்டின் பிரச்னையில் இருந்து இந்தியா புதிய நம்பிக்கை வலிமை மற்றும் பொறுப்புகளுடன் எழுந்தது. அதனை அமெரிக்கா பெரிதும் மதிக்கிறது. அதன் புதிய அவதாரம், பொறுப்புகளுக்கேற்ப பரஸ்பர நலன்கள் அடிப்படையில் ஒத்துழைக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது" அக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் இராணுவ மற்றும் பொருளாதார வலிமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன . இத்தகைய சூழலில், சர்வதேச உறவுகளைப் பொறுத்த மட்டில்,இந்திராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிறையவே இருக்கின்றன!
(சங்கப்பத்திரிக்கை 'காப்பீட்டு ஊழியர்' இல் வெளியானதின் ஒரிஜினல் படிவம்)

No comments:

Post a Comment