நம் இளைஞர்கள் படித்து முடிந்து ஒரு நல்ல வேலை கிடைத்த உடனே கல்யாணத்திற்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்றாலும் கூட கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துபவர்களின் அனுபவத்தையும் அவர்கள் சற்று சிந்தித்து பார்க்கலாம்.
ஒரு கல்யாணம் ஆகாத இளைஞனுக்கு உச்சி வெயிலுக்கும் நடு ராத்திரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விருப்பம் போல எந்த நேரத்திலும் எங்கும் செல்லலாம். பாச்சுலர் விடுதியில் தங்கி இருக்கும் இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரமோ முழுமையானது.
அருகாமை பிக்னிக் ஸ்பாட்டிற்கு நினைத்த மாத்திரத்தில் பல்சர் பைக்கில் பறக்கலாம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் பின்னால் ஒரு தோழியையும ஏற்றிக்கொள்ளலாம்!
ஒரே நாளில் நான்கு சினிமாக்களுக்குச் சென்றாலும் கேட்பதற்கு ஆள் கிடையாது. திருமணமாகி விட்டாலோ மாதம் ஒரு சினிமா என்று ரேஷன் ஆகி விடும் - அதுவும் மனைவியுடன் மட்டுமே !
சொந்த ஊரில் இருக்கும் பாச்சுலர் இரவில் எந்த நேரமும் வீட்டுக்குத் திரும்பி வரலாம். இரவுக் காட்சி சினிமாவுக்கு போய்விட்டு ரோட்டோர கடைகளில் டிபனை முடித்து விட்டு படுக்கையில் வந்து விழலாம். பின்னணி இசையாக அப்பாவின் திட்டு ஒலிக்கக கூடும்!
இரவில், அன்று பார்த்த சினிமாவின் கதாநாயகியை நினைத்து கனவு காணலாம். ஏராளமான இளம் பெண்களுடன் நெட்டில் சாட் பண்ணலாம்.
மனைவி வழிச் சொந்தங்களுக்கு, கல்யாணம இன்ன பிற வகையில் மொய் என்று பாதி சம்பளத்தைக் கொட்டி அழவும் வேண்டி இருக்காது.
பண்டிகைச் சமயங்களில் கூட ஒரு பாச்சுலர் பிரயாணம் பண்ண ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று ஆகி விட்டாலோ நிலைமை சிங்கி அடித்து விடும்.
மனைவுடன் வெளியே செல்லும் கணவன் எதிரே ஒரு அழகான பெண் வந்து விட்டால், உணர்வுகளை மறைக்க படும் பாடு அனுபவப் பட்டவர்களுக்கு தான் தெரியும்!
மனைவியின் அழகான தங்கையுடன் சற்று அன்பாக பேசி விட்டால் போதும், நான்கு அறைக்கு அப்பால் இருந்தாலும் மூக்கு வேர்த்து விடும் மனைவியின் முறைப்பு சிவனின் நெற்றிக்கண் !
படுக்கையில் வைக்கப்படும் கோரிக்கைக்கு உணர்ச்சி வசப்பட்டு ஒத்துக்கொண்டு பின்னர் வருந்தாத கணவர்களும் உண்டா என்ன?!
கணவர்கள் எல்லாரும் தங்களின் கைப்பாவை ஆக இருக்கவேண்டும் என்றே மனைவிமார் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் அண்ணனோ தம்பியோ அவ்வாறு இருந்தால் அது வெட்கக்கேடு !
எப்போவாவது நடக்கும் பார்ட்டிகளில் மது அருந்தி விட்டு, கிலோ கணக்கில் பாக்கு மென்ற பிறகும் தயக்கத்துடன் பயந்து பயந்து வீட்டுக் கதவைத் தட்டும் தர்மசங்கடம் எல்லாம் ஒரு பாச்சுலருக்கு இல்லை!
பொய் பேசும் கட்டாயமும் இல்லை - "நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்!"
"இன்னிக்கு உன் சமையல் சூப்பர்"
சண்டைக்கோழி மனைவிகளுக்கு பயந்து ஞாயிற்றுக்கிழமை அன்றும்
ஆபிசில் குடியிருப்போரும் உண்டு. எதோ ஒரு காரணத்திற்காக மனைவி பிறந்த வீட்டுக்குச சென்ற பின் அந்த குறுகிய காலததில் தங்கள் பழைய இனிமையான பாச்சுலர் நாட்களை பேரு மூச்சுடன் எண்ணிப் பார்த்து,கொஞ்சம் வாழ்ந்தும் பார்ககிறாக்கள்!
வாய் தவறி மனைவியின் குடும்பம பற்றி ஏதேனும் உண்மையை உளறி விட்டு பின்னர் முன்றாம் உலகப்போர் ரேஞ்சுக்கு பயப்பட வேண்டிய நிலையும் ஒரு பாச்சுலருக்கு இல்லை!
அநேக மனைவிகள் நம் தம்பியிடமே நமது குறைகளை பட்டியல் இட்டு விட்டுச் சொல்வார்கள், "நீங்கல்லாம் அப்படி இல்லை".
"ஏண்டி...அப்படியானால் அவனையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே?!" (மனசுக்குள் தான்!!)
பாச்சுலர்களே ரூம் போட்டு யோசித்தால் பிழைத்தீர்கள்.
(Tamil Translation of my article published in Alive Magazine-Womans Era group, in its 1st April 2010 issue)
No comments:
Post a Comment