Sunday, May 27, 2012

பெட்ரோல் விலை உயர்வு ரத்து!

கறுப்பர் இனத்தலைவர் 
மார்டின் லூதர் கிங் 
(அவரது வழி  காட்டி காந்தி)
காட்டிய வழி யில் நாட்டின் 
அனைத்து 
மோட்டார் டூ வீலர்களையும் 
சில நாட்கள் 
வீட்டிலேயே வைப்போம்,
வெளியே எடுக்க வேண்டாம்!
வேலைக்கு,
கல்லூரிக்கு 
நடந்தோ, சைக்கிளிலோ , பஸ்சிலோ 
கஷ்டத்தைப் பார்க்காமல் 
பயணிப்போம். 
ஒரு வாரத்திற்குள் 
அரசு மக்களிடம் 
மண்டியிடும்!

Saturday, May 26, 2012

மக்களைப் பொருட்படுத்தாத அரசின் தற்கொலை !

பெட்ரோலை ஊ(ஏ )ற்றி,
அரசு,
எதிர் வரும்
தேர்தல் வெற்றியை,
எரித்து விட்டது!


Wednesday, May 16, 2012

கடவுள் ?

கும்பகோணம் தீ விபத்தில் ,
குழந்தைகள்
மாண்ட செய்தியைக கேட்ட போதும்,
அரவாநிகளைப் பார்க்கும் போதும்,
பேருந்து நிலையங்களில் 
பிச்சை எடுக்கும் 
(மிகக்) குள்ள மனிதர்களின் 
குரலைக்  கேட்கும் போதும்,
"கடவுள்",  தன அருகில்
கேள்விக் குறி ஒன்றையும்
 படைத்துக் கொள்கிறார்!

Sunday, April 29, 2012

கருணாநிதியும் 'டெசோ'வும்

எதிர் கட்சியாக இருக்கும்போது வழக்கமாக செய்யும் செப்பிடு வித்தைகளை ஆரம்பித்து விட்டார் மு.க. ! ஈழப்போரின் உச்சத்தில் இவர் நினைத்து இருந்தால் , மன்மோகனுக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி பரவி தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கும் பொது இவர், அமைச்சர் பதவிகளுக்காக  டெல்லிக்குப் பறந்து (வீ ல் சேரில்!) போனதை மறக்க முடியுமா?!

Thursday, April 5, 2012

திக்...திக்.. திடீர் பிரேக்...





அதிவேக
இரவுப் பயணங்களில்,
ஆம்னி பஸ்ஸின்
திடீர் பிரேக்,
சமீபத்திய
விபத்துச்  செய்திகளை,
ஞாபக செல்களில்,
உயிரூட்டி விடுகிறது!

Tuesday, March 27, 2012

குழந்தை


 இருவர் இணைந்து,
இருளில் ,
எழுதும் கவிதை!

Sunday, March 25, 2012

தொலைந்து போதல்...

உறவினர் திருமணத்தில்
ஐந்து வயது மகன்,
தொலைந்து கிடைத்த
அரை மணி நேரத்தில்
உணர்ந்து கொண்டேன்...
இருபது வருடங்களுக்கு முன்
எட்டாம் வகுப்பில் தோல்வியுற்று
சென்னைக்கு
நான் ஓடிப் போனபோது
என் பெற்றோர்
அனுபவித்த வலியை!